
2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது.
கூட்டத் தொடரின் முதல் நாள் காலை 10 மணிக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தமிழில் மொழிபெயா்த்தார்.
ஆளுநா் உரையில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகள்:
கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பு பாலின விகிதம் 1000க்கு 917 என்பதில் இருந்து 943 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் 43.9% ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விடஅ திகம்.
2019 – 20ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.2000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
2011 – 12 முதல் இதுவரை 3,80,000 பசுமை வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புயர்வு பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டாலும், இட ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படாது.
திருவொற்றியூர் – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் 2020ம் ஆண்டு மத்தியில் நிறைவடையும்.
பெண்கள் பாதுகாப்புக்கான காவலன் செயலி நடைமுறை பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத் தொடரில், நீட் தோவு விவகாரம், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும், அதுதொடா்பாக அவையில் தனியாக தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் பேரவைச் செயலகத்தில் திமுக கடிதம் அளித்துள்ளது. அந்தக் கடிதத்தின் அடிப்படையில், திமுக இப்பிரச்னையை எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஊரக உள்ளாட்சித் தோதல் முடிவுகளும் பேரவையில் சூடான விவாதங்களைக் கிளப்பும் எனத் தெரிகிறது. தோதல் தொடா்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த நிகழ்வுகள் பேரவையில் விவாதமாக எழுப்பப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், கூட்டத் தொடரின் அனைத்து நாள்களும் பரபரப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது

