
கொலை மிரட்டல் புகார்… நடிகர் வடிவேலு தலைமறைவா!? அவரே அளித்த பதில்.
நடிகர் வடிவேலு மற்றும் தம்பி மணிகண்டன் உட்பட மேலும் இரண்டுபேர் மீது
எலி திரைப்பட தயாரிப்பாளர் கொடுத்த கொலை மிரட்டல் புகார் தொடர்பாக மதுரை
கே புதூர் போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத செக்சனில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக் செெய்திகள்வெளியானது
இதையடுத்து தான் எப்படியும் கைது செய்யப்படலாம் என நினைத்து
நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.
மதுரையில் உள்ள அவரது வீட்டில் வடிவேலு இல்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியாததால் வடிவேலு தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் நடிகர் வடிவேலுவிடம் தொலைபேசியில் கேட்ட போது “என் மீது எந்த வழக்கும் இல்லை.
. நான் எங்கும் தலைமறைவாக ஓடவில்லை. என் தலையை மறைக்கவே முடியாது. மீண்டும் நடிக்க வரப்போவதால் பரபரப்பு கிளப்பி விடுகிறார்கள். எந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்பேன்” என்கிறார் வடிவேலு.
