வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தனுஷ் நடித்த “பட்டாஸ்” சர வெடியா? சாதா வெடியா? கோடங்கி விமர்சனம்

 

 

Casting : Dhanush, Sneha, Mehreen Pirzada, Naveen Chandra
Directed By : R. S. Durai Senthilkumar
Music By : Vivek-Mervin
Produced By : Sendhil Thyagarajan, Arjun Thyagarajan

அப்பாவின் கொலை, அம்மாவின் சபதம் இந்த இரண்டுக்கும் காரணமான வில்லனை பழிவாங்கும் மகனின் கதை தான் ‘பட்டாஸ்’.

அப்பா- மகன் இரண்டு வேஷத்திலும் தனுஷ். அம்மாவாக சினேகா. ஹீரோயினாக மெஹ்ரின் பிரசாடா. இவர்களோடு முனீஸ்காந்த், நாசர் என பலர் களத்தில் இருக்கிறார்கள்.

மறைந்து விட்ட தமிழர்களின் தற்காப்பு கலையில் ஒன்றான அடிமுறை என்ற தற்காப்பு கலையை மீண்டும் இந்த படத்தின் மூலமாக நினைவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்.

வழக்கமான தனுஷ் படங்களை விட இந்த படத்தில் தனுஷ் கொஞ்சம் வித்தியாசமான முயற்சி செய்து இருக்கிறார். சின்னச் சின்ன திருட்டு செய்யும் துறுதுறு பையனாக தனுஷ் செய்யும் சேட்டைகள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். அப்பா தனுஷ் கதாப்பாத்திரம் அத்தனை கன கச்சிதம். அனுபவம் வாய்ந்த நடிப்பு தனுஷுக்கு மீண்டும் ஒரு நல்ல பேரை பெற்றுத்தரும்.

தமிழர்களின் பல பாரம்பரிய கலைகளில் அடிமுறையும் ஒன்று என்று அதை காட்சிப்படுத்தி படமாக்கியதற்காகவும் அந்த கலைகளை சொல்லும் வீரனாக தனுஷ் தன்னை மாற்றிக் கொண்ட விஷயத்திற்காகவும் இயக்குனரை பாராட்டலாம்.

ஹாலிவுட் படங்களில் இதுபோன்ற பழைய சண்டை படங்கள் வந்தால் வரவேற்று கொண்டாடும் நாம் தமிழில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் உள்ள சின்ன சின்ன குறைகளை மறந்து கொண்டாட வேண்டும்.

ரொம்ப நாளைக்கு பிறகு சினேகா அம்மாவாக… தன் கதாப்பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். கோபம் வெறி ஆவேசம் சண்டை பாசம் அன்பு என பல முகங்களில் சினேகா தேர்ந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்.

ஹீரோயின் மெஹ்ரின் முதல் பாதியில் அடிக்கடி தென்படுகிறார். பின் பாதியில் காணாமல் போகிறார்.

வில்லன் நவீன் சந்திரா வித்தியாசமான கதாபாத்திரமாக வருகிறார்.

“தண்ணியில்லாம குளிப்பாட்டி டவல் இல்லாம தொடச்சி அனுப்பும்” வசனங்கள் எல்லாம் பட தயாரிப்பு நிறுவனம் குறித்து எங்கயோ கேட்டது போலவே இருக்கிறது.
விவேக் மெர்வின் இசையில் இன்னும் சுரத்து வேணும்.

மொத்தத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் கொண்டாட பட்டாஸ் வழி ஏற்படுத்தி கொடுத்தாலும் இயக்குனர் துரை செந்தில்குமார் திரைக்கதையிலும், படமாக்கிய வித்த்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் அனைத்து சினிமா ரசிகர்களும் கொண்டாடி இருப்பார்கள்.

அசுரன் மெகா ஹிட் படத்துக்கு பின் பேசப்படும் கதையாக தனுஷின் பட்டாஸ்..!

– கோடங்கி

725 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன