செவ்வாய்க்கிழமை, மே 5
Shadow

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்

 

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்:_*

_இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 30 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் விண்வெளி மையத்தில் இருந்து, ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஏரியேன் – 5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

மொத்தம், 3 ஆயிரத்து 357 கிலோ எடையுள்ள, ஜிசாட் – 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, டி.டி.எச். மற்றும்,டிஜிட்டல் சேவைகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது._

443 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன