புதன்கிழமை, அக்டோபர் 7
Shadow

வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங்

 

வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், விசாரணை செய்த பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலம் உட்பட பல இடங்களில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், பிகில் நாயகன் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று ஷூட்டிங் நேரத்தில் அதை நிறுத்தி விட்டு படத்தின் கதாநாயகனை விசாரணை என்ற பெயரில் வருமானவரித் துறை அதிகாரிகள் அழைத்து சென்றது இந்திய சினிமா வரலாற்றில் இது தான் முதல்முறை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன