வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ஆஸ்கர் விருதுகள்… இரண்டு விருதுகளை வென்ற 1917

 

ஆஸ்கர் விருதுகள்… இரண்டு விருதுகளை வென்ற 1917

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது

சவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதை Ford Vs Ferrari படம்  வென்றது. விருதை டொனால்டு சில்வஸ்டர் பெற்றார். சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய விருதுகளை 1917 என்ற படம் வென்றுள்ளது. ஒளிப்பதிவுக்கான விருது ரோஜர் டீக்கின்சிடமும், சவுண்ட் மிக்சிங் விருதை மார்க் டெய்லர் மற்றும் ஸ்டுவார்ட் வில்சன் ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.

333 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன