ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளி – பெண்களை கேவலமாக சித்தரித்த குஜராத் சாமியாரின் சர்ச்சை பேச்சு

 

 

அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளி – பெண்களை கேவலமாக சித்தரித்த குஜராத் சாமியாரின் சர்ச்சை பேச்சு

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் செய்தால் அவர்கள் அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குஜராத் குருஷனஸ்வரப் தாஸ்ஜி என்ற சாமியாருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள், கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் பூஜை அறைக்குச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், அங்கே படிக்கும் 60 மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி காட்டுமிராண்டி தனமாக கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது என சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்வி நிறுவனத்தின் இந்த அத்துமீறிய அயோக்கியத்தனத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றினார்கள்.
அதனையடுத்து, அக்கல்லூரியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யபட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே கல்லூரியின் மதபோதரான குருஷ்னஷ்வரப் தாஸ்கி என்பவர் பேசிய ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் செய்தால் அவர்கள் அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் என மறை கழண்டவர் போல உளறி இருக்கும் இந்த சாமியாரின் பேச்சுக்கு பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.

நல்வழியை போதிக்க வேண்டிய சாமியாரே இந்த லட்சணத்தில் இருந்தால் அவர் கண்காணிப்பில் இருப்பவர்கள் லட்சணம் இப்படி தான் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன