புதன்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கதையா தனுஷ் நடிக்கும் “கர்ணன்”

 

கர்ணன் 90 சதவீத ஷூட்டிங் ஓவராம் – தனுஷ் தகவல்!

பரியேறும் பெருமாள் மெகா ஹிட்டுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தனுஷுக்கு 41வது படம். வருகிறார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டு உள்ளார்கள். பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணு பெரும் எதிர்பார்ப்போடு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜினா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்நிலையில், கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1,043 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன