வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

 

 

சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது.

குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என காட்டிய ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் சிங்கிள் டிராக் பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெளியிடப்பட்டது.

இப்போது இந்த படத்தை அப்படியே இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தி ரீமேக்கிலும் சூர்யாவே நடிப்பார் என தெரிகிறது.

410 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன