
மானிய விலையில் வழங்கப்படும் இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உயர்வு..!
மானிய விலையில் அரசு வழங்கும், இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை குளத்துப்பாளையம் பகுதியில், மகளிர் தின விழாவில், நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி பேசிய அவர், மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடன் உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு மதிப்பு அளித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், தமிழக அரசு மகளிருக்கு மானிய விலையில் வழங்கி வரும், இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 40-லிருந்து 45 ஆக உயர்த்தபட்டுள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
732 Views
