வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

பிரதமர், அமைச்சர்கள் உள்பட எம்.பி.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் வெட்டு… தொகுதி நிதி 2 ஆண்டுக்கு கட்… கொரானா எதிரொலி!

 

 

பிரதமர், அமைச்சர்கள் உள்பட எம்.பி.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் வெட்டு… தொகுதி நிதி 2 ஆண்டுக்கு கட்… கொரானா எதிரொலி!

புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வழியே இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு எதிர் கொள்ள உள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் பிரதமர் உள்பட எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் ஆளுநர்களின் ஊதியத்திலும் 30 சதவீதம் பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதோடு, முன்னாள் எம்.பி.க்களின் ஓவ்வூதியத்திலும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.  இந்த ஊதிய கட் நடைமுறை ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.

அதோடு எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் 5 கோடி ரூபாய் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது.  இதனால் ஒவ்வொரு எம்.பி.க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி உடனடியாக அரசு நிதியில் சேர்க்க திட்டமிடப்பட்டது.

ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.  இந்த அவசர சட்டம் உடனடியாக வந்தது.

இதனால் அரசுக்கு ரூ.7,900 கோடி மிச்சப்படும்.  இந்த நடைமுறை ஏப்ரல் 1ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

433 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன