செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

இயக்குனர் அட்லீ தயாரிக்கும் “அந்தகாரம்”

 

 

இயக்குனர் அட்லீ தயாரிக்கும் “அந்தகாரம்”

இயக்குனர் அட்லீ தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது.
அதன்பின் 3 ஆண்டு இடைவேளைக்கு பிறகு தனது அடுத்த படத் தயாரிப்பு குறித்த அறிவிப்பை அட்லீ வெளியிட்டுள்ளார்.

அவர் தயாரிக்கும் படத்தின் பெயர், ‘அந்தகாரம்’ இதை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார்.

விக்னராஜன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அந்தகாரம் படத்தின் டிரைலர் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிடப்படும் என அட்லீ  கூறியுள்ளார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலுடன் வெயியானது.

822 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன