ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

கொரானா பீதியால் மூடப்பட்ட தியேட்டர்களை சூறையாடும் எலிகள்… தொடரும் அதிர்ச்சி!

 

 

கொரானா பீதியால் மூடப்பட்ட தியேட்டர்களை சூறையாடும் எலிகள்… தொடரும் அதிர்ச்சி!

கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது.

ஊரடங்குக்கு முன்பே பாதுகாப்பு கருதி தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் மூடி விட்டார்கள்.

இதனால் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பே கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு மேலாகவே திரையரங்குகளும் மூடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையின் மையப்பகுதியில் உள்ள பிரலமான ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள திரையரங்குகள் இரண்டு வாரங்களுக்கும் மேல் மூடப்பட்டுள்ளதால் திரையரங்குகளை பராமரிக்க அரசின் அனுமதியை பெற்று சமீபத்தில் திரையரங்கு நிர்வாகிகள் திறந்து பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

திரையரங்கில் உள்ள சீட்டுக்கள் அனைத்தையும் எலிகள் கடித்து துவம்சம் செய்துள்ளதையும், ஸ்கிரீனையும் தாறுமாறாக கிழித்து தும்சம் செய்திருப்பதை பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

இதை சரிபடுத்த வேண்டுமானால் பல லட்ச ரூபாய் செலவாகும் என்று புலம்புகிறார்கள். இது மூடப்பட்ட ஒரு தியேட்டரின் நிலை இதே நிலை தமிழகத்தில் உள்ள பல நூறு தியேட்டர்களிலும் நடை பெறலாம்.

ஏற்கனவே கொரானா என்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தாக்கத்தால் தொழில் முடங்கிப் போன நிலையில் இந்த முடக்கம் நீங்கினாலும் உடனடியாக மீண்டும் தொழில் தொடங்க முடியாதபடி எலிகளின் இந்த தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

கொரானா முடிவதற்குள் இன்னும் என்னென்ன ரூபத்தில் இன்னல்களை சந்திக்குமோ திரையுலகம்.

1,512 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன