புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்குமாம்!

 

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை,’ தமிழகத்தில் விருதுநகர், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலும், திருத்தணியிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசை ஒட்டி பதிவாகும் என்பதால் *அடுத்துவரும் 2 தினங்களுக்கு மக்கள் யாரும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் காலையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலையில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்,’என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை 9 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியைத் தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, மதுரையில் 103 டிகிரி பதிவானது. கரூா்பரமத்தி, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் தலா 102 டிகிரியும், வேலூரில் 101 டிகிரியும், தருமபுரி, கன்னியாகுமரி, சேலம், தொண்டியில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

275 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன