சனிக்கிழமை, மே 2
Shadow

தினமும் 100 பாடல்கள்… ரசிகர்கள் மூலமாக பயனாளிகள் நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது 25 லட்சம் – அசத்தும் சின்மயி

 

 

தினமும் 100 பாடல்கள்… ரசிகர்கள் மூலமாக பயனாளிகள் நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது 25 லட்சம் – அசத்தும் சின்மயி

சின்மயி.. இந்த பெயரை கேட்டால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பிரபலம்… தன் குரலாலும் தைரியமான செயலாலும் எப்போதும் பிசியாக இருந்தவர்.

கடந்த இரண்டு மாதமாகக் கட்டாய ஓய்வு.

பாடல் ரெக்கார்டிங் , டப்பிங், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தேர்தலென்று 18 மணி நேரம் சுறுசுறுப்பாயிருந்தவர்
இந்தக் கட்டாய ஓய்வைக்
கொரானாவுக்கு உபயோகப்படுத்த
முடிவெடுத்தார்.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன்
ஃபாலோயர்களைக் கொண்ட
அவரது முகநூல் பக்கத்தில்
அழைப்பு விடுத்தார்

இப்படி :

“Instagramil fan request என்று வந்த
ரசிகர் விருப்பத்தை மாற்றி நான்
உங்களுக்காகப் பாடுகிறேன்….

நீங்கள் நான் அனுப்பும் நபரின்
account number க்குப் பணம்
transfer செய்து screen shot அனுப்
பினால் நான் உங்களுக்காகப் பாடி
அனுப்புவேன் ”

என்று ஆரம்பித்தார்.

1.உதவி தேவைப்படுபவர்கள்
விபரங்களுடன் தங்கள்
அக்கவுண்ட் நம்பரை அவருக்கு
அனுப்ப …

2.உதவி செய்ய விரும்புவர்கள்
தெரிவிக்க …

இருவரையும் இணைத்தார்.

அரசாங்கம், இடைத்தரகர்
எதுவுமில்லாமல் நேரடிப் பயன்.

தொழில் நுட்பத்தின் அற்புதப்
பயன்பாடு.

நன்கொடை கொடுத்தவருக்கு,
பிறந்தநாள்/திருமணநாள் /
வாழ்த்துகளுடன் பாடல் ஒன்றை
அனுப்புகிறார்.

ரெக்கார்டட் பாடலல்ல.
இப்போது பாடிய பாடல்.

வீட்டுக்கு வந்த எம். எஸ். சுப்புலக்ஷ்மி தேனீருடன் பாடல்பாட,
“ஆஹா எனக்கே எனக்கான பாடல்”
என்று நேரு மயங்கி அமர்ந்திருந்தாராம் …

நன்கொடையாளருக்கும் அதே
அனுபவம் உறுதி.

தன் அத்தை இறப்பதற்கு முன் அவருக்காக வந்த பாடலைக் கேட்டபடியே அமைதியாகக்
கண்ணை மூடினார் என்று
ஒருவர் ….

பாடல் முடிந்தவுடன் உனக்காகக்
காத்திருக்கிறான் இந்தப் பையன்
என்று காதலிக்குச் சொல்லச் சொல்லும் வேண்டுகோளும்
வருகிறதாம்….

வயதாகிவிட்டதே என்று தன்னை வருந்த வைத்த தகவல்!!

சிலருக்காகப் பழைய பாடல்களைப்
பாடித்தர , பயிற்சி செய்து
பாடுகிறாராம்.

இதுவரை சின்மயி வழங்க வைத்த பணம் ஒன்றல்ல இரண்டல்ல ரூ. 25 லட்சம்… அதாவது கால் கோடி ரூபாய்… நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் வங்கி கணக்குகளில்…

இன்னும் கோயிங் ஸ்டெடி…

தினமும் நூறு பாடல் பாடுகிறாராம் சின்மயி… இந்த சேவையை சத்தமில்லாமல் விளம்பரம் எதுவும் இல்லாமல் செய்வதுதான் சிறப்பு.

967 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன