சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

சரக்கடித்து ரவுடித்தனம் செய்வதை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை, சாதிவெறியாட்டம் நடத்திய பாமகவினர் – வன்னியரசு கண்டன அறிக்கை

 

சரக்கடித்து ரவுடித்தனம் செய்வதை தட்டிக்கேட்டதால் வாலிபர் படுகொலை  செய்து சாதிவெறியாட்டம் நடத்திய பாமகவினர் – வன்னியரசு கண்டன அறிக்கை

 

அறிக்கையில் அவர் கூறியிருப்பது:

சாதிவெறி- குடிவெறியோடு
வன்முறை-படுகொலை செய்த
மனநோயாளி ராமதாசு கும்பல்
……………………………………………..
முதல் நாள் முதல் கையெழுத்து என்று வாய்கூசாமல் தெரு தெருவாக கூவிக்கொண்டு அலைபவர் யார் என கேட்டால் கிடைக்கும் பதில் சாதிய மனநோயாளி ராமதாஸ் தான்.
பூரண மதுவிலக்கு என்று வாயளவில் சொல்வதோடு சரி. தமிழக அரசு இந்த கொரானா காலத்தில் மதுக்கடைகளை திறக்கும் போது பெயரளவில் ஓர் அறிக்கை அவ்வளவுதான். நீதிமன்றத்தில் கூட ஒரு போலியான வழக்கு தான். மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் எம்பி ஆனதால் மருத்துவர் அன்புமணி எல்லாவற்றையும் மூடிக்கொண்டு படுத்தே விட்டார்.
தமிழ்நாடு முழுக்க விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக கடந்த 6,7தேதிகளில் போராட்டம் நடத்தின.
ஆனாலும் மதுக்கடைகளை மூடுவதாக தெரியவில்லை. உயர்நீதிமன்ற நிபந்தனைகள் அத்தனையும் மருத்துவர் ராமதாசின் சத்தியம் போல குழிதோண்டி புதைக்கப்பட்டன.
மதுக்கடைகள் திறந்தால் குடிகாரர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு வன்முறை எழும் என்று
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை கொடுத்தனர். ஆனாலும் எடப்பாடி அரசு எதையும் கேட்பதாக தெரியவில்லை.

நினைத்தது போலவே நடந்து விட்டது.
குடிகாரர்களை தட்டிக்கேட்டதால்
சேரி குடியிறுப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி ஒரு படுகொலையையும் செய்துவிட்டு ஓடியிருக்கிறது சாதி மனநோயாளி ராமதாசு கும்பல்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கிராமம் நாலுகால் பாலம் புதுக்கடை.
இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள
நேற்று (8.5.2020)
மாலை மதுக்கடையில் சாராயம் குடிப்பதற்காக 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொட்டியபுரம் ஊரைச்சேர்ந்த குடிகார இளைஞர்கள் குடிப்பதற்காக நாலுகால பாலம் மதுக்கடையில் குடித்து விட்டு காட்டுக்கத்தல் கத்திவிட்டு இரு சக்கர வண்டியை தாறுமறாக ஓட்டிச்சென்றனர்.பெண்கள், குழந்தைகள் பதறி ஓட ஆரம்பித்தனர்.
உடனே நாலுகால் பாலத்தை சார்ந்த பொதுமக்கள் “ஏண்டா இப்படி குடிச்சுட்டு அட்டூழியம் பன்றீங்க” என்று கேட்டிருக்கின்றனர். ஆனாலும் விடாமல் வீம்புக்கு கத்திக்கொண்டே அங்கேயே சுற்றி இருக்கின்றனர். இதனால் நாலுகால் பாலத்தைச்சார்ந்த பொதுமக்கள் 3 குடிகாரர்களை பிடித்து வைத்தனர். மீதி தப்பி போனவர்கள் ஓமலூரை சார்ந்த பாமக மாவட்ட துனைச்செயலாளர் செந்தில் குமாரிடம் அழுது புலம்பியுள்ளனர்.
உடனடியாக செந்தில் ஒரு ரவுடிக்கும்பலை அழைத்துச்சென்று நாலுகால் பாலம் சேரி மக்களிடம்,
“ இனி அப்படி நடக்காது சாரி”என்று ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே ,
மறுபக்கம் அந்த ரவுடிக்கும்பலை சேரிக்குடியிறுப்புக்குள் அனுப்பி வழக்கமான வன்முறையில் ஈடுபட்டனர்.
வீடுகளை அடித்து உடைத்தனர்.”பறப்பயலுகளுக்கு இவ்வளவு திமிரா” என
மிக கேவலமாக சாதியை சொல்லி திட்டியுள்ளனர்.
அப்போது வீட்டுக்குள் சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்த விஷ்ணு பிரியன் என்னும் இளைஞர் என்ன நடக்குது என்று எட்டி பார்த்துள்ளார். உடனடியாக அந்த பாமக ரவுடிக்கும்பல் விஷ்ணு பிரியனை கத்தியால் மாறி மாறி குத்த அந்த இடத்திலேயே இறந்து போய்விடுகிறார்.சாப்பிட்ட சப்பாத்தி கூட விழுங்காமல் அப்படியே விஷ்ணு பிரியன் வாயிலேயே இருந்திருக்கிறது.
குடிபோதையில் அந்த கும்பலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்தளவுக்க வன்முறை வெறியாட்டம் தீவிரமானது. வந்த நோக்கத்தை வெற்றிகரமாக முடித்த மகிழ்ச்சியில் மாவட்ட துனைச்செயலாளர்
செந்தில் குமார் தலைமையிலான
பாமக கும்பல் ஓடியது. ஆனாலும் இரு குடிகார்களை பொதுமக்கள் பிடித்து வைத்தனர். அப்போது கூட சேரி மக்கள் கொலை செய்த அந்த கும்பலை எதுவும் செய்யாமல் போலீஸ் வரும் வரை காத்திருந்தார்கள்.

விடுதலைச்சிறுத்தைகளின் ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் களப்போராளி பாவேந்தன் உள்ளிட்ட தோழர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ
இடத்துக்கு விரைந்தனர்.
குடிவெறி – சாதிவெறியால் பலியான விஷ்ணு பிரியன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். திருமணம் முடிந்து இரு மாதங்கள் தான் ஆகிறது.
எந்த கட்சியிலும் இல்லாதவர்.
இந்த ஊரடங்கு காலத்தில் சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள்.

சேலம் மாவட்ட ஐஜி, எஸ்பி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து அங்கேயே பிடித்து வைத்த அந்த பாமக குடிகாரர்களை கைது செய்தனர். பாமக மாவட்ட துனைச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறைப்படுத்தி இருக்கிறது சேலம் மாவட்ட போலீஸ். இன்னும் பல பாமக குடிகாரர்களை தேடிக்கொண்டு இருக்கிறது போலீஸ்.

“ஏண்டா இப்படி சரக்கடிச்சுட்டு ரவுடித்தனம் பன்றீங்க”ன்னு கேட்டதுக்காக குடிவெறியோடும் சாதிவெறியோடும்
ஒரு படுகொலையை செய்துள்ளது
பாமக கும்பல்.

தன்னுடைய குடும்ப நல வெறியால் அப்பாவி வன்னிய இளைஞர்களை எப்படி தவறாக வழிநடத்துகிறார் பாருங்கள்.
இப்படிதான் தைலாபுரத்தில்
பயிற்சி கொடுக்கிறாரா
சாதிய மனநோயாளி ராமதாஸ் அய்யா?
-வன்னி அரசு

1,622 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன