
மே 31வரை ரயில், விமான சேவை தொடங்க வேண்டாம் – பிரதமரிடன் முதல்வர் கோரிக்கை
கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் ஊரடங்கு தளர்வு, கொரானாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்தி ரெயில், விமான சேவைகளை மீண்டும் இயக்கலாமா? என பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கருத்துக்களை கேட்டார்.
அப்போது காணொலியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கொரானா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மே 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் மற்றும் விமானச் சேவைகளை தமிழகத்தில் தொடங்க வேண்டாம் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
