வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

“அக்னி” க்கு பைபை… கன மழைக்கு வாய்ப்பு!

 

 

“அக்னி” க்கு பைபை…
கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருவதால் ஏற்படக்கூடிய வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும்.
விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது, இதில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சில தினங்களுக்கு முன் கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திருச்சி, மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்ச வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸாக இருக்கும். எனவே அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்.
இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் 11.30 முதல் 3.30 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டார்கள். அதே போல வெயிலும் கடுமையாக சுட்டெரித்தது. அனல்காற்று வீசியது. ஊரடங்கு காரணமாக பொது மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பாதிப்பு பெருசாக இல்லை.

இந்த நிலையில் மே-4ம் தேதி தொடங்கி மக்களுக்கு வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சென்னையில் அதிகபட்ச வெயில் நேற்று 39 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

341 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன