புதன்கிழமை, ஜூன் 10
Shadow

மக்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்துங்கள் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் வேண்டுகோள்

 

கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்துங்கள் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் வேண்டுகோள்

கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக நாடுமுழுவதும் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் மத்திய மோடி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தனது சமூக வலைதளத்தில் அவர் கூறும்போது: கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ.10 ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்து அவர்கள் சொந்த மாநிலங்கள் செல்ல உதவி செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார் பவன்குமார்.

762 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன