
மின்வாரியத்தில் அதிகப்படியான கட்டணம் குறித்த சர்ச்சைகள் பரவலாக எழுந்த நிலையில் மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் திடீரென வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுதும் தங்களுக்கு மின் வாரியக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக பலரும் புகார எழுப்பினர். ஊரடங்கால் திறக்கப்படாத கடைகளுக்கு முந்தைய கட்டணமே கட்டச் சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக மின்சார வாரியம் மீது அதிருப்தியான சூழல் உருவானது.
இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த விக்ரம் கபூர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவுக்குத் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின்பகிர்மான கழக நிர்வாக இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
