வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

பல் மருத்துவரை மணக்கப் போகும் பிரபல இயக்குனர்!

 

பல் மருத்துவரை மணக்கப் போகும் பிரபல இயக்குனர்!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை பலரும் எளிமையாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் புகழ்பெற்ற ‘சாஹோ’ படத்தின் இயக்குனர் சுஜித் ரெட்டி தற்போது திருமணம் செய்ய இருக்கிறார்.

இயக்குனர் சுஜித் ரெட்டி, பிரவல்லிகா என்ற பல் மருத்துவரை மணக்க இருக்கிறார். கொரானா ஊரடங்கால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது.

வெறும் இரண்டு படங்களிலேயே உச்சம் தொட்ட இயக்குனர் சுஜித் ரெட்டி அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

744 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன