சனிக்கிழமை, அக்டோபர் 17
Shadow

பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்!

 

பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்!

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகினர்.

அவர்களிடம் ஜூன் 19-ந்தேதி என்ன நடந்தது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன