சனிக்கிழமை, மே 2
Shadow

வழக்கு விசாரணை முடிவதற்குள் ஜாமீன் கேட்கும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ. பாலகிருஷ்ணன்…

 

 

சாத்தான்குளத்தில் காவல்துறை கொடூரமாக தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தமிழகம் தாண்டி ஐ.நா மன்றம்வரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 5 போலீசாரை கைது செய்தனர்.

வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் விசாரித்த முதல் நாளிலேயே மேலும் ஒரு எஸ் ஐ உட்பட 5 போலீசாரை கைது செய்தார்கள்.

மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முருகன், முத்துராஜா  உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 8 போலீசார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு எஸ்.ஐ. பால்துரை உட்பட 2 பேர் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு காணொலி வாயிலாக விரைவில் விசாரணைக்கு வரலாறு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கு விசாரணை இன்னமும் முடிவடையாத போது வழக்கின் முக்கிய குற்றவாளிகள் ஜாமீன் மனு கேட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

433 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன