சனிக்கிழமை, மே 2
Shadow

சாத்தான்குளம் படுகொலை சம்பவம் கைதான போலீசுக்கு ஜூலை 30வரை காவல் நீடிப்பு!

 

சாத்தான்குளம் படுகொலை சம்பவம் கைதான போலீசுக்கு ஜூலை 30வரை காவல் நீடிப்பு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொடூர கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். 3 நாட்களாக அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவத்தை நடித்து காட்டச் சொல்லி வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

விசாரணைக்குப் பிறகு அவர்களிடம்  தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்நிலையில் 3 நாள் சிபிஐ காவல் முடிந்து 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 4 போலீசாருக்கும் மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.  ஜூலை 30 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

4 போலீசாரையும் மதுரை மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலர் முத்துராஜை மேலும் 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிபிஐ காவல் முடிந்த 5 பேருக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

456 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன