
நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை. நான் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் இல்லை – கருப்பன் விஜயசேதுபதி
விஜயசேதுபதி நடிப்பில் பன்னீர் செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்து வருகிறார். படம் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
பத்திரிகை சந்திப்பில் விஜய சேதுபதி பேசியதாவது:
கருப்பன் படம் முன்னாடியே முடிவு செய்த படம். நாங்க ஷூட்டிங்ல இருக்கும் போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துச்சி. அவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம்.
நான் யாருக்கும் போட்டி எல்லாம் இல்லீங்க. இங்க நீளம், உயரம் எல்லாம் இல்ல சினிமா ஒரு வட்டம் மாதிரி யார் மேலே யார் கீழே அப்படி எல்லாம் சொல்ல முடியாது.
நண்பர்கள் கேட்டுகிட்டதால கெஸ்ட் ரோல் தவிர்க்க முடியல. விஜய சேதுபதி ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் எல்லாம் இல்லீங்க. இது என்னோட ஊர்.

எந்த படமும் நடிகனுக்காக ஓடுறதே இல்லை. நடிகன புடிச்சா முதல் 2 நாள் வருவாங்க. அதுக்கு அப்புறம் கதை அவங்களுக்கு பிடிக்கனும். 10 நிமிடங்கள் மட்டுமே நடிகனுக்காக படம் பாப்பாங்க. அதுக்கு பிறகு கதை அவங்களை உக்கார வைக்கனும். கருப்பன் அப்படிதான் இருக்கும்.
முதலிரவு காட்சியிலும் குழந்தைகளோடு பார்க்கிற நாகரீகத்தோடு இருக்கும். முகம் சுளிக்கும் காட்சிகள் இருக்காது.
எனக்கும் பேண்டசி கதையில் நடிக்க ஆசை. நாம அடிச்சாலும் 10 பறக்கனும்னு. கதை எதுவானாலும் மக்களுக்கு புடிச்ச மாதிரி இருந்தா போதும்.
மக்களுக்கு நல்லது செய்யனும்னு யாருக்கு மனசு இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.
