திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

ஜெ.,வீட்டில் தங்கம்,வெள்ளி உட்பட உள்ள பொருட்களின் பட்டியல் வெளியீடு!

 

 

ஜெ.,வீட்டில் தங்கம்,வெள்ளி உட்பட உள்ள பொருட்களின் பட்டியல் வெளியீடு!

அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது. 8,376 புத்தகம், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள், 394 நினைவு பரிசுகள் இருப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமன்கள், 108 அழகு பொருட்களும் இடம் பெற்றுள்ளன.29 டெலிபோன், செல்போன், 15 பூஜைப் பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

ஜெ. பயன்படுத்திய 10,438 ஆடைகள் உள்ளிட்ட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன