ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி

 

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

 

மத்திய உள்துறை அமைச்சர் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்தபோது மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தற்போது அவருக்கு கொரானா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடல்நிலை சீராக இருப்பதாக அமித் ஷா டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
367 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன