ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

இந்தி மொழி பிரச்சினை… கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்!

 

இந்தி மொழி பிரச்சினை… கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்!

இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா? என தி.மு.க. எம்.பி, கனிமொழியிடம் கேள்வி எழுப்பட்டதற்கு  கர்நாடக முன்னாள்  முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில்,

தென்னிந்தியாவில் பிறந்த  கருணாநிதி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் பிரதமராக கூடிய தகுதியுடன் இருந்து, இந்தி அரசியலால் அவர்கள் பிரதமர் பதவியை அடைய முடியவில்லை என்றும் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த சக்கர வியூகத்தை உடைத்து பிரதமரான ஒரே தென்னிந்திய தலைவர் தேவகவுடா என்றும்,  அவரை ஒரு கன்னடர் என்றே இந்தி அரசியல் விமர்சித்தனர்.

இந்தி ஆளுமை, இந்தி அரசியல், இந்தி ஆதிக்கம் போன்ற காரணங்களால் தென்னிந்தியர்கள் பணி வாய்ப்பை இழந்து வருகின்றனர்.

தேகவுடா பிரதமராக இருந்தபோது டெல்லி செங்கோட்டையில் கட்டாயப்படுத்தி இந்தி பேச சொன்னார்கள். பீகார், உத்தரப்பிரதேசம் விவசாயிகளை மனதில் வைத்து தேவகவுடாவும் இந்தியில் பேசினார்.

இந்த மாதிரிதான் இந்தி அரசியல் இந்தியாவில் நீட்டித்து வருகிறது. நானும் இரண்டு முறை எம்பியாக இருந்துள்ளேன். அப்போது எல்லாம் கன்னட மொழியை அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

அவர்கள் கன்னட பேச்சை நிராகரித்தனர். இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து செல்லும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு தேவை இல்லாதவர்களாக உள்ளனர். கன்னடர்களுக்கு மத்திய அரசுப் பணியும் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்தியை உலக அரங்கில் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை செலவிட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

 

335 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன