வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்!

 

 

கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும்முறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பித்தால் உடனே இ-பாஸ் கிடைக்கிறது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இன்றி விண்ணப்பித்த நபர்களுக்கு இ-பாஸ் கிடைத்தது. விண்ணப்ப காரணங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாத நிலையில் உடனே இ-பாஸ் தரப்படுகிறது.

ஆதார் அல்லது ரேசன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் இ-பாஸ் உடனே கிடைக்கும். 2 நாள் அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது ஒருநாள் மட்டுமே இ-பாஸூக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதையடுத்து சென்னைக்கு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

387 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன