செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22
Shadow

விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டும்: தமிழக அரசு

 

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்: தமிழக அரசு

பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இன்று தெரிவித்துள்ளது.

கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இன்று இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்து அமைப்புகள் அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன