
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது டுவிட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முக கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறி அவருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது குறித்து தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது.
இந்தநிலையில், பிரசாந்த் பூஷணுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கினாலும், அது பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தண்டனை குறித்த வாதத்தின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும் தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுவில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தண்டனை அமல்படுத்தப்படாது என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர முடியாது. எந்த தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்கத் தயார் என்று பிரஷாந்த் பூஷண் அறிவித்துள்ளார். வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்று வருகிறது. வாதத்தின் போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர முடியாது என்று மகாத்மா காந்தியை மேற்கோள்காட்டி பூஷண் தெரிவிச்சிட்டார்.
