
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் போன்ற விருதுகள் வழங்கப்படும்.
அதன்படி இந்தாண்டு விருது வாங்குவோர் பட்டியலில் 500க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் மற்றும் கேல் ரத்னா விருது பெறுவோரின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்திய விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்த விருது பெறுவோரில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
531 Views
