
தமிழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட அறிக்கையில், ”
அறிக்கையில், “தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு, இன்று அனைத்துத்துறைகளிலும் தமிழகத்தின் முன்னேற்றம் தேக்க நிலைமைக்கு வந்துவிட்டது.”

“234 சட்டமன்ற உறுப்பினர் பலம் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், 113 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கிறது”, என்று தேர்தல் ஆணையத்தில், முதலமைச்சரின் அணி சார்பில் வெளிப்படையான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கின்ற இந்தநேரத்தில், பதவியேற்கும் புதிய ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
