சனிக்கிழமை, மே 2
Shadow

தென்னிந்திய திரையுலகை முற்றிலுமாக புறக்கணிக்கும் மத்திய அரசு!

 

திரையரங்குகள் மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினரோடு வரும் 8ம் தேதி கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த கூட்டத்தில் தென்னிந்தியாவில் உள்ள எந்த சங்கத்திற்கோ, திரையரங்கு உரிமையாளர்களுக்கோ அழைப்பு இல்லை.

ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவை புறக்கணித்து இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

தென்னிந்திய வர்த்தக சபையான பிலில் சேம்பர் என்ன செய்கிறது?

ஆண்டுக்கு சில படங்களை மட்டும் எடுக்கும் குஜராத்தில் இருந்து இரு அமைப்புகளுக்கு அழைப்பு.

ஆண்டு முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 800க்கும் அதிகமாக படமெடுக்கும் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது வேதனையான உண்மை.

திரைத்துறை இப்போதாவது விழித்துக் கொள்ளுமா!

– கோடங்கி

280 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன