வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

கடும் கட்டுப்பாடுகளுடன் நாளை நீட் தேர்வு!

 

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் எழுதும் ‘நீட்’ தேர்வு நாளை நடக்கிறது. கொரோனாவையொட்டி தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன

தேர்வர்கள் கையில் 50 மில்லி அளவுகொண்ட கிருமிநாசினி திரவம், வெளிப்படையான வாட்டர் பாட்டில், கையுறைகள், தேர்வுக்கு தேவையான ஆவணங்கள் எடுத்துச்செல்லலாம்.

தேர்வு அறையில் தேசிய தேர்வு முகமை சார்பில் முககவசம் வழங்கப்படும். அந்த முககவசத்தை தான் தேர்வர்கள் அணிந்து தேர்வு அறைக்குள் செல்லவேண்டும்.

அதேபோல், தேர்வு முடிந்ததும், ஹால் டிக்கெட்டில் கேட்டு இருக்கும் விவரங்களை சரியாக பூர்த்திசெய்து, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மாணவர்கள் தேர்வு மைய வளாகத்தில் தேர்வர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது முதன்மையான கட்டுப்பாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

197 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன