வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

மத்திய , மாநில அரசுகளை எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

 

மத்திய , மாநில அரசுகளை எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே இன்று   தோழமை கட்சிகளின் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்த ஆலோசனைக்குப் பிறகு, வேளாண் மசோதாவுக்கு எதிராக வரும் 28 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தோழமை கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “நாடாளுமன்ற நெறிமுறைகளை மிதித்து, கொண்டுவரப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்களுக்கு அனைத்துக் கட்சிகளின் கூட்டம் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கிறது; ஆதரித்திருக்கும் அதிமுக அரசுக்கும் வன்மையான கண்டனங்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளுடன் 5 வருட ஒப்பந்தம்; விநியோகம் செய்ய வேண்டிய நேரம், விலை, தரம், அளவு, தர நிர்ணயக் கட்டுப்பாடுகள்; மூன்றாவது நபரின்
தரச்சான்று; எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் உள்ளிட்ட பிரிவுகள் அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

245 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன