ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

வேளாண் மசோதாவை கண்டித்து பச்சை துண்டுடன் காஞ்சிபுரத்தில் களம் இறங்கிய ஸ்டாலின்

 

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காஞ்சிபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி கீழ்அம்பியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

பச்சைத்துண்டு, பச்சை நிற மாஸ் அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், முன்னதாக வயலில் இறங்கி அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து பேசினார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை பெருங்குடி கந்தன்சாவடியில் வைகோ, ரவிபச்சமுத்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

348 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன