செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்… வென்ற இபிஎஸ்… நடந்தது என்ன!?

 

முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்… வென்ற இபிஎஸ்… நடந்தது என்ன!?

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி . அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பு.

அதிமுகவில் 1991ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை முதல்வர் வேட்பாளர் ஆக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் புதிய முதல்வர் வேட்பாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு ஆகி இருக்கிறார்.

2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக மக்கள் முன்பு களம் இறங்குகிறார்கள்.

மக்கள் யாரை ஆதரிக்க போகிறார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பின் தெரியவரும்.

ஆனால், முதல்வர் வேட்பாளர் ஆக வரவேண்டும் என பல கட்ட முயற்சிகள் செய்த முன்னாள் முதல்வர் இப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் திடீரென சமரசம் செய்து கொண்டது ஏன் என்ற கேள்வி இப்போது அனைவரிடமும் எழும்புகிறது.

இபிஎஸ் ஓபிஎஸ் இருவருக்கும் இடையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த பனிப்போர் கடந்த சில வாரங்களில் உச்சகட்டத்தை அடைந்தது.

கடந்த செயற்குழு கூட்டத்திலும் தன் எதிர்ப்பை காட்டினார் ஓபிஎஸ்.

இன்று முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவத்ற்கு முன்பு அதிகாலைவரை ஓபிஎஸ் இபிஎஸ் இடையே சமரச பேச்சுக்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென இபிஎஸ் கை ஓங்கி முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்பதை ஓபிஎஸ் மூலமாகவே அறிவிப்பு வெளியிட்ட வகையில் இபிஎஸ் வெற்றி பெற்று இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முதல்வர் வேட்பாளர் ரேசில் இருந்து திடீரென ஓபிஎஸ் பின் வாங்கியதற்கு பின்னாலும் ஒரு ராஜ தந்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்றைக்கு உள்ள தமிழக அரசியல் சூழலில் வரும் 2021 தேர்தலில் ஆட்சியில் இருக்கும் அதிமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், எதிர்க் கட்சியான திமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்ட இபிஎஸ் கடந்த 1989ம் ஆண்டில் ஜெ அணியில் முதல் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

601 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன