ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

 

 

 

தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று, அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மத்திய மற்றும் தென் கிழக்கு கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

அந்தமான் கடற்பகுதியில் வருகிற 14-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

347 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன