
மும்பை அலிபாக் பகுதியில் 2018ம் ஆண்டு இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். .
அவர் தனது மரணத்துக்கு ரிபப்ளிக் டிவி முதன்மை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி காரணம் என எழுதி வைத்துள்ளார்.
அதன் அடிப்படையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.
அதற்காக அர்னாப் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினருக்கும் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அதில் பெண் காவல் அதிகாரி ஒருவரை அர்னாப் கோஸ்வாகி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அர்னாப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை அர்னாப் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
