செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

கறுப்பர் கூட்டம்,  கடந்த ஆண்டு முருகனின் கந்தசஷ்டி கவசம் குறித்து வெளியிட்ட அவதூறான கருத்து, தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான கண்டனம் எழுந்த நிலையில், அதை வைத்து தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி அரசியல் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக  வரும் 6ந்தேதி திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல்யாத்திரை ஒன்றை நடத்தப்போவதாக  அறிவித்து உள்ளது. சுமார் 1 மாத காலம் நடைபெறும் இந்த இந்த வேல் யாத்திரையானது, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று இறுதியாக , டிசம்பர் 6ந்தேதி திருச்செந்தூரில் முடிவடைய உள்ளது.

தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரையில் மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

379 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன