வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்!

 

மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகி வரும் படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி புஜ்ஜி பாடல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து, இன்று காலை 9 மணிக்கு புஜ்ஜி பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியுள்ளது. என்னை மட்டும் லவ் யூ சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் கிள்ளி வையி புஜ்ஜி, என்னை மட்டும் பாலோவ் பண்ணு புஜ்ஜி” என்ற பாடல் வரிகள் காதலர்களின் ரொமான்ஸ் டியூன் ஆகியுள்ளது.

கேட்கும் போது பாப் சாங் போல் இருக்கும் இப்பாடலை சந்தோஷ் நாராயணனும் அனிருத்தும் போட்டிப்போட்டுக்கொண்டு பாடியுள்ளனர். பாப் பாடல் போல் இருப்பதால், தனுஷ் மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் மட்டுமல்ல நடனத்திலும் தெறிக்கவிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்பாடலை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

286 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன