புதன்கிழமை, மே 20
Shadow

சிங்காரவேலன் வெளியிடும் நிழல் பட்ஜெட் ஆர்வக்கோளாறா?  அதிர்வலையா? 

 

தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக சிங்காரவேலன் வெளியிடும் நிழல் பட்ஜெட் ஆர்வக்கோளாறா?  அதிர்வலையா?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி@முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர் இவர்களை தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டுதுணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே பதவியில் இருந்தவர் கதிரேசன் இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் சங்க வளர்ச்சிக்கு, உறுப்பினர்கள் நலனுக்காக எந்த முன்முயற்சியும் எடுக்காதவர் என்கிற அதிருப்தி தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது

இராம நாராயணன் தலைவராக இருமுறை பதவியில் இருந்த போது செயலாளராக பதவியில் இருந்தவர் சிவசக்தி பாண்டியன் அவரது பதவி காலத்தில் உறுப்பினர்கள் சம்பந்தபட்ட பிரச்சினைகளை சமரசம் இன்றி அணுகியவர் எவருக்கும் பாதிப்பு இன்றி சமரச தீர்வுகாண முயற்சித்தவர் என்கிற நற்பெயர் தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது
கடந்த ஐந்தாண்டுகளில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு இவரை பற்றி அதிகம் தெரியாதது இவருக்கு பலவீனமாக உள்ளது

P.T.செல்வகுமார், அடிதடி முருகன் இருவரையும் அனைவருக்கும் தெரிந்தாலும் இவர்களுக்கான ஆதரவு அலை தனிப்பட்ட முறையில் இல்லை அணியின் சார்பில் கிடைக்க கூடிய வாக்குகள் இவர்கள் இருவரையும் கடும் போட்டியாளராக களத்தில் நிறுத்தவில்லை

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்ட R.K.சுரேஷ் கடும் போட்டியாளராக களத்தில் உள்ளார் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடன் தனிப்பட்ட முறையில் வாக்களர்களை சந்தித்து “கவனிப்பு” மூலம் கவர்ந்து வருகிறார் என கூறப்படுகிறது

சுயேச்சையாக போட்டியிடும் முருகானந்தம் தேர்தல் களத்தில் இருக்கிறாரா என பூதகண்ணாடி வைத்து தேட வேண்டி இருக்கிறது

சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவேலன் ‘வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வரும் இவர் எனக்கு ஓட்டளிப்பதற்கு உங்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் அனைவரது நலனுக்காக போராடுவேன் முதல்முறையாக போட்டியிடும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என கேட்டு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அனைவரது கவனத்தையும் சிங்காரவேலன் தன் பக்கம் திருப்பி வருகிறார்.

கடந்த காலங்களில் பொறுப்பில் இருந்தவர்கள் சங்கத்துக்கு வர வேண்டிய வருமானத்தை மடைமாற்றி விட்டதையும், சங்கத்தின் உரிமைகள், கௌரவம் பறிபோன போது தடுக்காமல் கள்ள மௌனம் சாதித்தை ஆதாரபூர்வமாக வெளியிட்டு வருவது தேர்தல் களத்தில் கடும் அதிர்வலையை தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக நிழல் பட்ஜெட் ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை வெளியிட இருப்பதாக சிங்காரவேலன்அறிவித்து உள்ளது தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது

சிங்காரவேலன் நிழல் பட்ஜெட் தேர்தல் அறிக்கையில் என்னதான் இருக்கிறது என விசாரித்தபோது இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த அணியும் இது போன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில்லை என்கிற வடிவத்தில் இருக்குமாம்.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி அளவிற்கு வருமானம் கிடைக்ககூடிய திட்ட வரைவு அறிக்கையாக அது இருக்கும் அறிக்கை வெளியான பின்பு வாக்காளர்களின் கவனமும் சிங்காரவேலன் பக்கம் திரும்பும் சாதாரண வேட்பாளராக இரண்டு அணிகளாலும் அலட்சியமாக பார்க்கப்பட்டவர் முதல் சுற்றில் வெற்றி பெறும் வேட்பாளராக முந்துவது நிச்சயம் என்கிறது சிங்காரவேலன் ஆதரவு வட்டாரம்.

456 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன