புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

வெப் சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக விமலா ராமன்

 

சேரனுக்கு ஜோடியாக நடித்த நடிகை விமலா ராமன் வெப் சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக கலக்கி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று பார்வையாளர்களிடத்தில் சேரப்பா என்றே அப்பாவாக மனதில் பதிந்தவர் இயக்குனர் சேரன். பொறுப்பான இயக்குனராக சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என படத்தின் மூலம் நிரூபித்தவர்.

அவர் நடித்த படங்களில் ஒன்று ராமன் தேடிய சீதை. கடந்த 2018 செப்டம்பர் 19 ல் இப்படம் வெளியானது. கே.பி.ஜெகநாத் இயக்கத்தில் இப்படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை விமலா ராமன் நடித்திருந்தார்.

மழை நின்ற பின்பும் தூறல் போடல் பாடலினால் அவரின் முகம அனைவரின் மனதையும் ஈர்த்தது. பாலசந்தர் இயக்கத்தில் பொய் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராமன் தேடிய சீதை, இருட்டு படங்களில் நடித்திருந்தார்.

மலையாளம், தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வந்த இவர் தற்போது பப் கோவா வெப் சீரிஸில் பெண் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையான், அபிஷேக், ஜோசப் ராஜ், தேவ் ஆகியோரும் நடிக்கின்றனர். லட்சுமி நாராயணா இயக்குகிறார். பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்களை மையப்படுத்தி இக்கதையை எடுக்கிறார்களாம். இதில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாராம் விமலா ராமன்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன