வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகர் ரஜினிகாந்த்திற்கு காய்ச்சல் என்று வெளியான தகவல் உண்மையில்லை

நடிகர் ரஜினிகாந்த்திற்கு காய்ச்சல் என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று பி.ஆர்.ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார்.

நடிகை, நடிகைகள் குறித்து வழக்கமாக வதந்திகள் பரவுவதும் ,அதற்கு அவர்கள் விளக்கமளிப்பதும் வழக்கம் தான் . அந்த வகையில் இன்று காலை முதல் ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது .

இதனால் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக ரஜினியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கமளித்த பிஆர்ஓ ரியாஸ் அகமது, ரஜினிக்கு காய்ச்சல் என்று பரவி வரும் தகவல் வதந்தி. அவர் பண்ணை வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியதில் உண்மை இல்லை. அவர் உடல்நிலை நன்றாக இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

280 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன