வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திருப்பதி செல்லும் வழியில் சென்னை வரும் ஜனாதிபதி!

 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் நாளை காலை டில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். இதையடுத்து சென்னை பழைய விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காலை 6.30 மணிக்கு டில்லி பாலம் விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் புறப்படுகிறாா். காலை 9.15 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா்.அங்கு ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்பு காலை 9.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி புறப்பட்டு செல்கிறாா்.

அதன்பின்பு நாளை மாலை திருப்பதியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா்.ஜனாதிபதியை வரவேற்று வழியனுப்புகின்றனா்.இதையடுத்து மாலை 5.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் டில்லி புறப்பட்டு செல்கிறாா்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் சென்னை வருகிறாா்.அவா் விமானநிலையத்திலிருந்து வெளியே வரவில்லை.ஆனாலும் சென்னை பழைய விமானநிலையத்தில் இன்று காலையிலிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதியின் விமானம் வந்து நிற்கும் இடம்,அவா் பயணிக்கவிருக்கும் ஹெலிகாப்டா்கள் நிற்கும் பகுதிகள் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதோடு பழைய விமானநிலையத்தில் பணி, மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஊழியா்கள் அனைவரையும் பலத்த சோதணைகளுக்கு பின்பே உள்ளே அனுமதிக்கின்றனா்.உரிய பாஸ் மற்றும் அடையாள அட்டைகள் இல்லாதவா்களுக்கு உள்ளே அனுமதி இல்லை.சென்னை பழைய விமானநிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

325 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன