
மெர்சல் பட விவகாரங்களில் ஏற்பட்ட சர்ச்சைகள் நேரத்தில் விஜய் ஜோசப் விஜய் என பி ஜே.பி கட்சியினரால் விமர்சிக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன் விஜய் வெளியிட்ட நன்றி அறிவிப்பில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டிருந்தார்.
விஜய்க்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள் அறிக்கை வெளியிட்டனர்.
நயன்தாரா நடிப்பில் அறம் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் கோபி விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், எனக்கு எந்த பெயர் வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் எந்தப் பெயரோடு நான் வெளிப்பட வேண்டும் என்பது எனது உரிமை .
என் பெயருக்குப் பின்னால் இன்னொரு அடையாளம் இருப்பதாக ஒரு மதவாதி அடையாளப் படுத்தினால்
என் அடிப்படை உரிமையை படுகொலை செய்யும் ஆள்காட்டி வேலையை செய்கிறது என்பது பொருள்
விஜய் கிறித்துவராகோ , இஸ்லாமியராகவோ புத்திஸ்ட்டாகவோ சீக்கியராகவோ இருப்பது நடிகர் விஜய்யின் உரிமை
இதனால் தான் மதவாத அமைப்புகள் மனித உரிமைக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் என நம்போன்ற பகுத்தறிவாளர்கள் , ஜனநாயக சக்திகளால் அடையாளப் படுத்தப்படுகிறது
ஒருக் கருத்தைச் சொல்ல உரிமைக் கிடையாது என்று நீ கூறுவதற்க்கு உரிமை இருக்கிறதென்றால் மறுக்கப்படும் அக்கருத்தை மீண்டும் மீண்டும் சொல்ல எனக்கும் உரிமையிருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் டைரக்டர் கோபி.

