செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று வீசி வருவதாகத் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது படிப்படியாக வலுப்பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் கூறினார்.

தமிழகம் புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்த அவர், சென்னையில் விட்டு விட்டு ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்

379 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன