வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?  பிரதமருக்கு கமல் கேள்வி

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?  பிரதமருக்கு கமல் கேள்வி

கமல் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதிய பாராளுமன்றம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கமல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு வருமாறு:-

சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?
பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே….
இவ்வாறு கமல் கூறி உள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1337964742158163969?s=20
286 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன