
பாஜகவை விட பெரிய திருடன் இல்லை: மம்தா பானர்ஜி கடும் தாக்கு
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மம்தா பானர்ஜி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்.
மத்தியில் ஆளும் பா.ஜனதா கடும் நெருக்கடி கொடுத்து வந்தாலும், அது பற்றி மம்தா பெரிதாக கவலைப்படவில்லை. மத்திய அரசு, ஆளுநர் ஆகியோர் எதிர்த்து நிற்கிறார்.
இந்த நிலையில் ஜல்பைகுரி என்ற இடத்தில் மம்தா பேசினார். அப்போது ‘‘பா.ஜனதாவை விட பெரிய திருடன் இல்லை. அவர்கள் சம்பல் கொள்ளைக்காரர்கள்… அவர்கள் 2014, 2016, 2019 தேர்தல்களில் ஏழு தேயிலை தோட்டங்கள் மீண்டும் திறக்கப்படும், அவற்றை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் என்றார்கள். தற்போது வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளிக்கிறார்கள். அவர்கள் ஏமாற்றுகிறார்கள்.
அவர்கள் CAA, NRC அல்லது NPR ஆகியவற்றை செயல்படுத்துவோம் என்கிறார்கள். NRC-க்கும், NPR-க்கும் இடையிலான வித்தியாசம் என்ன?. அசாம் நமக்கு மிகவும் அருகில் உள்ளது. NRC-யில் இருந்து 19 லடசம் பெங்காலியர்கள் விடுபட்டுள்ளனர்.
மைனாரிட்டி வாக்குகளை பிரிப்பதற்கு அவர்கள் ஐதராபாத்தில் இருந்து ஒரு கட்சியை பிடித்துள்ளனர். பா.ஜனதா அவர்களுக்கு பணம் கொடுக்கிறது. அவர்கள் வாக்குகளை பிரிக்கிறார்கள். பீகார் தேர்தல் இதை நிரூபித்துள்ளது’’ என்றார்.
247 Views
